2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்துடன் இணைந்து, மே 31 ஆம் திகதி காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான நாளாகவும் அதன் பாதகமான விளைவுகளைக் குறைப்பதற்கான நாளாகவும் பெயரிடப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தால் வாகன புகை உமிழ்வை பரீட்சித்தல் மற்றும் திருத்தும் நிகழ்ச்சித்திட்டம் (tuneup முகாம்) கேகாலை சுதந்திர மாவத்தையில் அந்த நாள் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கேகாலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாகரிகா அதாவுதா அவர்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகள், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு. கமல் அமரசிங்க, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர், வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் திரு. தசுன் ஜனக கமகே, கேகாலை பிரதி பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்டத்தின் இரண்டு மேலதிக மாவட்ட அதிபர்கள், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.