வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் நாடு முழுவதும் பரந்துள்ள TVS மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட புகை பரீட்சித்தல் செயல்முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வு. 2025.06.27 ஆம் திகதி அதன் முதலாவது குழுவுக்கான செயலமர்வு ஹொரணையில் உள்ள TVS மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. அதற்காக புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பொறியியல் பணிப்பாளர் திரு. தசுன் கமகே அவர்கள் மற்றும் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. அசேல சாமர ஆகியோர் வளப் பங்களிப்பு செய்திருந்தனர்.